உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வெளியூர் கிளம்பிய நாகார்ஜுனா

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வெளியூர் கிளம்பிய நாகார்ஜுனா

தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனா ஆகஸ்ட் 29ல் தனது 67வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கிறார். வழக்கமாக அவரது பிறந்த நாளன்று ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவரை தேடி வருவது வழக்கம். ஆனால் இந்த முறை நாகார்ஜுனா வெளியூர் பயணம் செய்ய இருக்கிறார் என்பதால் ஹைதராபாத்தில் உள்ள வீட்டிற்கு தன்னை தேடி வர வேண்டாம் என அவரது சார்பில் அறிக்கை ஒன்று ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல நாகார்ஜுனா தனது மனைவி அமலா மகன் நாக சைதன்யா மருமகள் சோபிதா ஜூலிபாலா ஆகியோருடன் குடும்பமாக விமான பயணம் மேற்கொள்வதற்காக விமான நிலையம் வந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. வெளியூருக்கு பயணம் செல்கிறார்களா வெளிநாட்டுக்கு செல்கிறார்களா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இப்போது வரை தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !