உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜுனாவின் 100வது படம் கிங் 100 : பிறந்தநாளில் வெளியான வீடியோ

நாகார்ஜுனாவின் 100வது படம் கிங் 100 : பிறந்தநாளில் வெளியான வீடியோ

ரா.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்து வரும் 100 படத்தை கிறிஸ்துமஸ்க்கு வெளியிட தயாராகி வருகிறார்கள். நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர். அதில், கிங் 100 என்பது தற்காலிக தலைப்பு அல்ல, அதுவே அதிகாரப்பூர்வ தலைப்பு என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட முதல் பார்வையில் நாகார்ஜுனா மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். வயது கூடினாலும் இளமையாகத் தோன்றும் அவரது தோற்றம், தற்போதைய இளம் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

கிங் 100 படம் ஏழ்மையிலிருந்து பணக்காரனாக உயரும் ஒரு வணிக ரீதியான கதையாகும். இதன் மையக்கருவாக தந்தை-மகள் பாசம் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வையில் காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. இப்படம் கிறிஸ்துமஸையொட்டி வருகிற டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தபு, சுஷ்மிதா பட், விஜயேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !