உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அரவிந்த்சாமி பட பாடல்

'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அரவிந்த்சாமி பட பாடல்


கடந்த வருடம் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா: சாப்டர் 1 ; சந்திரா' படத்தில், இளையராஜா இசையில் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் ஆன 'கிளியே கிளியே' என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டு இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் வீடியோக்களாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் தற்போது சமீபத்தில் நிவின்பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்திலும் பல வருடங்களுக்கு முன்பு தயாராகி வெளிவராமல் நின்று போன ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் எடுத்து பயன்படுத்தப்பட்டு, அது இன்று சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயக்குநர் ஜோஷி இயக்கத்தில், அரவிந்த்சாமி, மீனா ஆகியோர் நடிப்பதாக இருந்த 'அண்ணா' என்கிற படத்திற்காக அவுசப்பச்சன் இசையில் 'யவன கதையில் நின்னு வந்த' என்கிற ஒரு பாடல் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா ஆகியோர் குரலில் உருவாக்கப்பட்டது. அந்தப் படம் வெளிவராமல் போன நிலையில், 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. அந்தப் பாடலை இந்தப் படத்தில் அழகாக இணைத்துள்ளார். பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !