உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் ஆனார் நித்யா மேனன் : கதை நாயகியாக அவரே நடிக்கிறார்

தயாரிப்பாளர் ஆனார் நித்யா மேனன் : கதை நாயகியாக அவரே நடிக்கிறார்

தமிழிலில் வெப்பம், ஓ காதல் கண்மணி, காஞ்சனா, 24, சைக்கோ, இருமுகன் , இட்லி கடை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த தலைவன் தலைவி பெரிய வெற்றி பெற்றது. 100 கோடி வசூலை அள்ளியது. ஆனால், அடுத்து அவர் படங்களில் நடிக்காமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில் அவர் தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை தன்னுடைய கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் அவரே கதை நாயகியாக நடிக்கிறார். பேண்டஸி டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தை டிகே இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு கிருஷ்ணா, ஓவியா நடித்த ‛யாமிருக்க பயமே', ஜீவா நடித்த ‛கவலை வேண்டாம்', வைபவ், வரலட்சுமி நடித்த ‛காட்டேரி', காஜல் அகர்வால் நடித்த ‛கருங்காப்பியம்' ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்திற்கு இயக்குநர் விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இவர் 24 படத்தை இயக்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகிறது. நடிகை நயன்தாரா, சார்மி ஆகியோர் தயாரிப்பாளர் ஆகி உள்ளனர். அந்த வரிசையில் நித்யா மேனனும் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !