தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள்
ஒவ்வொரு ஆண்டும் 250க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆனாலும், தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாட்களில் எந்த படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு இதுவரை பிரபுதேவா, யோகிபாபு நடித்த 'மூன்வாக்' மட்டுமே ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் பெரிய பட்ஜெட்டில் உருவான, ரன்பீர்சிங், சாய்பல்லவி நடித்த 'ராமாயணா' படமும் தீபாவளிக்கு வருகிறது. இந்த படங்கள் தவிர, ஜீத்துமாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடித்த பெயரிடப்படாத படமும் தீபாவளிக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' படத்தையும் தீபாவளிக்கு வெளியிடலாமா என யோசிக்கிறார்களாம். விஜய்சேதுபதி நடித்த ஏதாவது ஒரு படமும் தீபாவளிக்கு வர வாய்ப்பு. ரஜினியின் 'அண்ணாமலை'யும் தீபாவளிக்கு ரீரிலீஸ் ஆகிறது. அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படம் தீபாவளி ரேசில் இருந்து ஒதுங்கி, நவம்பர் இறுதியில் வரும் என தகவல். ரஜினி, கமல், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற நடிகர்கள் படங்கள் தீபாவளிக்கு வரவில்லை.