ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..!
வாரந்தோறும் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக வெளியாகும் புதுப்படங்களின் வரிசையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியாகி சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த சாதனை படைத்த இந்த படம் நாளை (செப்.11ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
மகுடம்
விஷால் முதன்முறையாக இயக்கி மூன்று கெட்டப்பில் நடித்தப் படம் 'மகுடம்'. இந்த படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை(செப்.11ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
பஞ்சநாமா (Panchnama)
தெலுங்கு இயக்குநர் மோகன் ஸ்ரீவத்ஸா இயக்கத்தில் நடிகர் பரத், மேதா ரெட்டி, உதய பானு உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் தொடர் 'பஞ்சநாமா (Panchnama)'. இந்த தொடர் நாளை (செப்.11ம் தேதி) ஜீ5யில் வெளியாகியுள்ளது.
வரவு (Varavu)
மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், ஜோஜூ ஜோர்ஜ், சானியா ஐயப்பன், உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ஆக் ஷன் திரைப்படம் 'வரவு (Varavu)'. இந்த திரைப்படம் நாளை (செப்.11ம் தேதி) ஜீ5யில் வெளியாகவுள்ளது.
வீரபத்ருணி ரகசியம் (Veerabhadraruni Rakashiyam)
தெலுங்கு இயக்குநர் பீமாகனி ஸ்ரீ வர்தன் ரெட்டி இயக்கத்தில், அன்னி, ரகு குஞ்சே, ரகு, அபினவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள வெப் தொடர் ' வீரபத்ருணி ரகசியம் (Veerabhadraruni Rakashiyam)'. இந்த தொடர் நேற்று (செப்.09ம் தேதி) ஜீ5யில் வெளியாகி உள்ளது.
பிரின்ஸ் ஆப் மோலிவுட்(Prince of Mollywood)
மலையாள இயக்குநர் ஷானி காதர் இயக்கத்தில், டெய்ன் டேவிஸ், நிர்மல் பாலாஜி, ஹரிஷ்மா, வித்யா விஜயகுமார் மற்றும் புக்ரு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள வெப் தொடர் 'பிரின்ஸ் ஆப் மோலிவுட்(Prince of Mollywood)'. காமெடி தொடரான இது, நாளை (செப்.11ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.