80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!!
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும். இப்போது டிரெண்ட் செட்டராக இருப்பஸ் ‛80'ஸ் டிரெண்ட். அதிலும் ஏஐ வந்த பிறகு நினைத்த விஷயங்களை தத்ரூபமாக கொண்டு வர முடிகிறது. சாட் ஜிபிடியில் ஜிப்லி அனிமேஷன் போட்டோ டிரெண்ட் ஆகி வைரலானது.
இதன் தொடர்ச்சியாக, 80ஸ் காலத்திலான புகைப்படங்கள் உருவாக்குவது தற்போது இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகியுள்ளது. அதாவது நெட்டிசன்கள் தங்களின் புகைப்படங்களை, 1980 காலகட்டங்களில் வெளியான திரைப்பட கதாபாத்திரங்கள், பழைய குடும்ப போட்டோ ஆல்பம், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோ போன்றத்தை உருவாக்கி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் 80ஸ் டிரெண்ட்டை உருவாக்கி தங்களது வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கேஆர் விஜயா, எம்எஸ் விஸ்வநாதன் உள்ளிட்ட அந்தக்கால சினிமா ஆளுமைகள் 80ஸ்களில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை விளக்கும் ஒரு சின்ன கற்பனைத் தொகுப்பு தான் மேலே பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள்.