உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்'

'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்'


மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான படம் 'டாக்சிக்'. யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வந்த இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டது. சுமார் 600 கோடியில் தயாரானதாக சொல்லப்படும் இந்த படம் 300 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத் தொகையும் கணிசமாக குறைந்துள்ளது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு, இப்படத்தின் ஓடிடி உரிமத்துக்கு முன்னணி நிறுவனம் ஒன்று 150 கோடி வரை வழங்க முன்வந்தது. ஆனால், படம் திரையரங்குகளில் வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்ற நம்பிக்கையில், ஓடிடி உரிமத்தை ரூ.200 கோடிக்கும் அதிகமாக விற்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தியேட்டர்களில் படம் மோசமான வரவேற்பை பெற்றதால், தற்போது ஓடிடி தளங்கள் அனைத்து மொழிகளுக்குமான உரிமத்துக்கு வெறும் 30 கோடி மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த எதிர்பாராத இழப்பைக் குறைக்கும் வகையில், ஓடிடி பதிப்புக்காக படத்தின் காட்சிகளை முற்றிலுமாக மாற்றி அமைத்து எடிட் செய்யப்பட்ட ஒரு புதிய பதிப்பை வெளியிடப் படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

குறிப்பாக படத்தில் இடம்பெற்ற படுக்கை காட்சிகள், கொடூர வன்முறை காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளில் எடிட்டரும், இயக்குநர் கீத்து மோகன்தாசும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு முக்கியமான இயக்குநரை கொண்டு மறு எடிட் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !