உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்'

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்'


வாக்த்ரோ என்டர்டெயின்மெண்ட் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்துள்ள படம் 'கோல்டு கால்'. இதில் புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் கதை நாயகர்களாக நடிக்கிறார்கள். அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். வரும் 18ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பற்றி இயக்குநர் கூறும்போது “சந்தையில் அறிமுகமாகும் பொருட்களை விற்பனை செய்யும் தமிழ்நாடு - கேரளா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த நான்கு தென்னிந்திய விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை நகைச்சுவையாக சொல்வதுதான் படம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !