உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி


ஜெயா தொலைக்காட்சியில் குஷ்பு நடத்திய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். சினிமாவில் சிறிது மார்கெட் குறைந்ததும், சின்னத்திரைக்கு வந்து 'ஜாக்பாட்' நிகழ்ச்சி மூலம் தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டார். வட இந்திய பெண்ணான குஷ்புவின் வித்தியாசமான தமிழ் உச்சரிப்பும், அவர் அணிந்த ஜாக்கெட்டும் நிகழ்ச்சியை பிரபலமாக்கியது. அப்போது நடந்த கோடீஸ்வரன், தங்க வேட்டை நிகழ்ச்சிக்கு ஈடாக ஜாக்பாட்டும் நடந்தது.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஷ்பு ஜெயா டிவியில் எண்ட்ரி கொடுக்கிறார். கடந்த சில தினங்களாக 'குழப்பத்தில் குஷ்பு' என்ற விளம்பரம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. அந்த புரமோ மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கானது என்று இப்போது தெரியவந்துள்ளது.

வருகிற 13ம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முன்பு நடந்த ஜாக்பாட் நிகழ்ச்சி போன்றே இந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. ஆனால் பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை குஷ்பு நடத்தியபோது பூசி மெழுகின தோற்றத்தில் இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஸ்லிம்மாகி ஆளே மாறிப்போய் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !