உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமம் விற்பனையான 'ஹைக்கூ'

ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமம் விற்பனையான 'ஹைக்கூ'

டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் 'ஹைக்கூ'. கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் அறிமுகமான ஏகன், ஸ்ரீதேவி மற்றும் பெமினா ஜார்ஜ் நடிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது. சித்துகுமார் இசை அமைக்கிறார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அக்டோபர் 23ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறும்போது “ காதல் கதைகள் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வரும் நிலையில், 'ஹைக்கூ' வெளியாகிறது. இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள், மனதை வருடும் இசை மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது. படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !