உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக்

அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக்

தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள படம் ‛பிளடி பாலிடிக்ஸ்'. நாயகியாக அஞ்சனா நேத்ரன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் இயக்குனர்கள் பி வாசு, செல்வராகவன், ஏ வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கவுதமின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பட டீசர் வெளியானது. முழுக்க முழுக்க அரசியலை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே அரசியல்வாதியாக ஆக துடிக்கும் இளைஞரான கவுதம், தனது பாதையில் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் ஒன்லைன் கதை. அரசியல் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் படம் ரிலீஸாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !