லண்டன் கார் ரேஸை துவக்கி வைத்த முதல்வர் விஜய் : ஆரத்தழுவி வரவேற்ற நடிகர் அஜித்
லண்டன்: லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், அங்கு லீமான்ஸ் கார் பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக இதில் பங்கேற்ற நடிகர் அஜித்துடன் ஆரத்தழுவி அன்பை பரிமாறிய சம்பவம் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
புதிய தொழில முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், லண்டனில் மிகவும் பிரபலமான லீ மான்ஸ் கோப்பைக்கான கார் ரேஸை துவக்கி வைத்தார். இந்தக் கார் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்தும் அவரது அணியும் பங்கேற்றனர்.
கார் பந்தயத்தை துவக்கி வைப்பதற்காக, சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றார். அப்போது, அங்குள்ள லண்டன் வாழ் தமிழர்கள், அவருடன் செல்பி எடுத்து ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, அங்கு அஜித்தை சந்தித்த முதல்வர் விஜய், கார் பந்தயத்தில் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிலையில், லீ மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முன்னதாக, காரில் போட்டிக்காக அமர்ந்திருந்த அஜித்துக்கு, கைகொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அவருடன் கார் அருகே அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ஓடிச்சென்று ஆரத்தழுவி முத்தமிட்ட முதல்வர்
சில்வர்ஸ்டோனில் போட்டிக்காக காத்திருந்த நடிகர் அஜித்தை பார்த்ததும், முதல்வர் விஜய் ஓடிச்சென்று ஆரத்தழுவிய நிலையில், இருவரும் அன்பு முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, இருவரும் ஒன்றாக ரசிகர்களை பார்த்து கை அசைத்தனர்.
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை அவர் பார்வையிட உள்ளார். அப்போது, அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களை சிறப்பாகவும் , வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்.
திரிஷா பங்கேற்பு
அஜித்தின் கார் ரேஸை முதல்வர் விஜய் துவக்கி வைத்துள்ள நிலையில் இந்த போட்டியை காண நடிகை திரிஷாவும் வந்துள்ளார். ஏற்கனவே தான் நடித்து வரும் படப்பிடிப்புக்காக லண்டனில் உள்ள திரிஷா படப்பிடிப்பு ஓய்வின் போது ரேஸை காண வந்துள்ளார். மேலும் முதல்வர் விஜய்யும் வருகை தந்துள்ளதால் அந்த நட்பின் அடிப்படையிலும் போட்டியை காண வந்துவிட்டார். முதல்வர் விஜய் உடன் ஒரே கேலரியில் போட்டியை ரசித்தார் திரிஷா. உடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் இருந்தனர்.