துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் 'ஜாக்கி - நோ ரீடேக்ஸ் அலவுட்'
'வர்மா, மகான், பைசன்' படங்களுக்குபின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஜாக்கி - நோ ரீடேக்ஸ் அலவுட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் துருவ் நடித்த மற்ற படங்கள் போல் அல்லாமல், பக்கா கமர்ஷியல் படமாக, நோ ரீ டேக்ஸ் அலவுட் என்ற டேக்லைனுடன் படத்தின் ஆக்ஷன் பின்னணியுடன் உருவாகி உள்ளதாக தகவல். இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். ஹீரோயின் யார் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இன்று விக்ரம் நடிக்கும் 63வது படத்தலைப்பும் வெளியாக உள்ளது. அந்த படத்தை இருமுகனுக்குபின் ஆனந்த்சங்கர் இயக்குகிறார்.