உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை

சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படம் நவம்பர் 6ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர்கள் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய உரிமைகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதில், திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு இப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. அதேசமயம் விஜய் டிவி, ஸ்டார் மா இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது.

ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், அவ்னி சினிமாஸ், ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !