உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஆனந்த் ராமை கரம்பிடித்தார் நடிகை பிரிகிடா

நடிகர் ஆனந்த் ராமை கரம்பிடித்தார் நடிகை பிரிகிடா

நடிகர் ஆனந்த் ராமை, நடிகை பிரிகிடா சாகா திருமணம் செய்துள்ளார். வாழ்த்திய அனைவருக்கும் பிரிகிடா நன்றி தெரிவித்துள்ளார்.

‛ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. தொடர்ந்து ‛மாஸ்டர், இரவின் நிழல், கோழிப்பண்ணை செல்லதுரை, மார்கன், ஹாட் ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், ‛மீசைய முறுக்கு படத்தில் நடித்த ஆனந்த் ராமை காதலித்து வந்தார். சமீபத்தில் தங்களது காதலை இருவரும் வெளிப்படுத்திய நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.

இந்நிலையில் நேற்று இவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமண போட்டோவை வெளியிட்டு, ‛‛நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, உங்களது ஆசியால் நெகிழ்ச்சியில் திளைக்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார் பிரிகிடா.

சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்துள்ள ஆனந்த் ராம், ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது சத்தமின்றி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !