உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துரந்தர்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த 'ஹனுமான் அன்ஷ்'

'துரந்தர்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த 'ஹனுமான் அன்ஷ்'


ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில், 'ஹனுமான் அன்ஷ்' படம் தனது வலுவான வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. இதன் தெலுங்கு ரிலீஸ் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், ஹிந்தியில் வசூல் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.

இப்படம் தற்போது தனது 6வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 6வது வாரத்தில் மட்டும் இதுவரை ரூ. 64.87 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இதில் திங்கள்கிழமை ரூ.8 கோடியும், செவ்வாய்கிழமை ரூ.7.80 கோடியும் வசூலித்துள்ளது. 6வது வாரத்திலும் திங்கள்கிழமை வசூலுக்கு நிகராக செவ்வாய்கிழமையும் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

6வது வாரத்தின் 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஹிந்தி திரைப்பட உலகிலேயே 6வது வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையை ஹனுமான் அன்ஷ் படைத்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன் துரந்தர் படத்தின் ரூ. 28.95 கோடி சாதனையை இது முறியடித்துள்ளது. 6வது வாரத்தின் திரையரங்க ஓட்டம் இன்னும் முடியாததால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனுமான் அன்ஷ் படம் இதுவரை இந்தியாவில் மொத்தம் ரூ. 218.03 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் வசூலித்து வருகிறது. நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஹிந்தி ஆன்மிக சுயசரிதை திரைப்படத்தை டாக்டர் விஷால் சதுர்வேதி இயக்கியுள்ளார். ஷோபிநாவ் சத்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !