உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்எஸ் சுப்புலட்சுமி 'பயோபிக்' : ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனிருத் பெயர்

எம்எஸ் சுப்புலட்சுமி 'பயோபிக்' : ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனிருத் பெயர்


தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என தனது இசையால் இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இன்றைய தலைமுறையினருக்கான அதிரடி இசையை அவர் தருவதால்தான் முன்னணியில் இருக்கிறார் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

இதனிடையே, கர்நாடக சங்கீதத்தில் தனி ஆளுமையாகத் திகழ்ந்த, பல சாதனைகளைப் புரிந்த எம்எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'அலா பொலேலோ' போன்ற சமீபத்திய ஹிட்களைக் கொடுத்த அனிருத், கர்நாடக இசை சம்பந்தப்பட்ட ஒரு படத்திற்கு எப்படி இசையமைக்கப் போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற இப்படத்தின் துவக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், “கே பாலசந்தர் சாருக்கு எப்படி 'அரங்கேற்றம்' படத்திற்குப் பிறகு அவருக்கு ஒரு திருப்பம் வந்ததோ, கே விஸ்வநாத்துக்கு 'சங்கராபரணம்' படத்திற்குப் பிறகு எப்படி அவரது பயணம் அப்படியே மாறுச்சோ, அதே மாதிரி, அனிருத்தின் இசைப் பயணம் இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் மாறும். அது மாற வேண்டும் என்றும் விரும்புகிறேன். இதை அவரிடம் சொல்லுங்கள். அவர் இப்போது பயணிப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !