உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்கள் எதிர்பார்த்த 'மொத ராத்தரி' முதல் 'இருமுடி' வரை: இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்...!

ரசிகர்கள் எதிர்பார்த்த 'மொத ராத்தரி' முதல் 'இருமுடி' வரை: இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்...!


இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இருமுடி
தெலுங்கு இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' இருமுடி'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த்து. இந்த படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

ராம் அண்ட் லீலா
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா, முனிஷ்காந்த், மாகாபா ஆனந்த், மாளவிகா அவினாஷ், சேத்தன் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' ராம் அண்ட் லீலா'. இந்த படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

மொத ராத்திரி
இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' மொத ராத்திரி'. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

அங்கீகாரம்
இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ராஜேஷ், வசுந்தரா காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' அங்கீகாரம்'. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட்டில் வெளியாகவுள்ளது.

துடக்கம்
மலையாள இயக்குநர் ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கத்தில், விஸ்மயா மோகன்லால், ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய் குமார், மனோஜ் கே.ஜெயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'துடக்கம்'. இந்த படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நாளை ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இருட்டறை
தெலுங்கு இயக்குநர் நிதின் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் திரைப்படம் 'இருட்டறை'. இந்த படம் நாளை ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !