உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்?

'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்?


தற்போது தெலுங்கில் நானி நடித்துள்ள படம் 'தி பாரடைஸ்'. படக்குழுவினர் பல நடிகைகளின் பெயர்களைப் பரிசீலித்த பிறகு, இறுதியில் நானிக்கு ஜோடியாக நடிக்க கயாடு லோஹரை தேர்ந்தெடுத்தனர். கயாடு லோஹரை பொறுத்தவரை, இதுவரை அவரது தெலுங்கு திரைப்பயணத்தில் இதுவே மிகப்பெரிய வாய்ப்பாகும்.

பொதுவாக, முன்னணி நடிகைகள் இதுபோன்ற பெரிய பட வாய்ப்புகளின் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், திரையுலகில் கவனம் பெறவும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், தி பாரடைஸ் படத்தின் விளம்பரப் பிரசாரங்களில் கயாடு லோஹர் காணப்படாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கயாடு லோஹர் ஏன் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்று நானியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நானி, அவர் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கயாடு லோஹரை இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வர அனுமதிக்கவில்லை. அதுதான் அவர் வராததற்குக் காரணம் என்று கூறினார். நானியின் இந்த விளக்கத்தின் மூலம், கயாடு லோஹர் பங்கேற்காததற்கு அவரது தற்போதைய படப்பிடிப்பு கமிட்மென்ட்களே முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !