உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

முன்னணி நடிகரான எஸ்.ஜே.சூர்யா தற்போது ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். இவர் கடந்த 2002 முதல் 2009 வரையிலான நிதியாண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை ரத்துத் செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்கள் 2022ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போன்ற மனுவை தற்போதும் தாக்கல் செய்தார். முந்தைய காரணங்களையே தற்போதும் தாக்கல் செய்துள்ளார். அதேபோன்று மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

இதை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது. அவர் வருமானவரித்துறை தொடர்ந்துள்ள 6 வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !