'தமிழக மக்கள் கழகம்': கட்சி துவங்கிய அஜித் ரசிகர்கள்
தமிழகத்தில் நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி துவக்கி, 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராக பொறுப்பேற்றார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து புதுக்கட்சியை துவக்கியுள்ளனர். 'தமிழக மக்கள் கழகம்' என பெயரிட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் ஒன்றுசேர்ந்த அஜித் ரசிகர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து இந்த கட்சியை துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்சியின் 'மாநிலப் பொதுச்செயலாளர்' பதவியை அஜித்துக்காகக் காலியாக வைத்துள்ளதாகவும் அவர் அரசியலுக்கு வந்தால் இக்கட்சி அவருக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அரசியல், ரசிகர் மன்றம் என எதுவும் வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார் அஜித். குடும்பப் பணிகளுக்கே ரசிகர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அஜித் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் இப்போது கட்சி துவங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.