உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மகாராஜா 2' கதை ரெடி…விஜய் சேதுபதி தகவல்

'மகாராஜா 2' கதை ரெடி…விஜய் சேதுபதி தகவல்


நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மகாராஜா'.

தியேட்டர்களில் மட்டுமல்லாது ஓடிடியில் வெளியான பிறகு உலக அளவிலும் உள்ள சினிமா ரசிகர்கள் பலர் இப்படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டினார். வேறு எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு சர்வதேச அளவில் இப்படத்திற்குக் கிடைத்தது.

'மகாராஜா 2' படத்தின் கதையும் தற்போது ரெடியாகி உள்ளதாக 'பத்தா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். மேலும், 'மகாராஜா' படம் ஹாலிவுட் ரீமேக்கிற்குச் சென்றுள்ளது குறித்தும், அவரது ஹாலிவுட் விருப்பம் குறித்தும் தெரிவித்துள்ளார்.

“மகாராஜா' பத்தி பேசினால் முதல்ல நித்திலன் பத்தி சொல்லணும். அவன் ஒரு எக்சலண்ட் ஆன இயக்குனர். அவனோட 'ரைட்டிங் சென்ஸ்' அற்புதமா இருக்கும். சமீபத்துல 'மகாராஜா 2' கதை சொன்னான், ரொம்ப அருமையா இருந்தது. அவன் கூட வேலை பார்க்கிறது சூப்பரா இருக்கும்.

இந்தப் படம் இவ்வளவு தூரம் போகும்னு யாரும் எதிர்பார்க்கல. படம் நல்லாயிருந்தது. படம் முடிஞ்ச பிறகு சிலருக்கு நம்பிக்கையில்லை. எனக்குலாம் இருந்தது, ஆனா, எதிர்பார்க்கல.

கொஞ்ச நாள் முன்னாடிதான் தயாரிப்பாளர் சுதன் சார் போன் பண்ணி சொன்னாரு. படத்தை நான் ஹாலிவுட்டுக்கு வித்துட்டேன்னாரு.

நிஜமாவா சார் சொல்றீங்க, யார் நடிக்கப் போறான்னு கேட்டேன், அவரோட பேரைச் சொன்னாரு. நான் வேணா உங்களுக்கு ப்ரீயா ஒரு படம் நடிச்சித் தரேன். எப்படியாவது அந்தப் படத்துல ஒரு ரோல் மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்கன்னு சொன்னேன்.

எனக்கு ஹாலிவுட்ல போய் வேலை செய்யணும்னு ஆசை இருக்கு, அது நடக்குமா நடக்காதான்னு தெரியாது. ஆனா, என் படம் அங்க போறதுல சந்தோஷப்படறேன். இதனோட மொத்த பேரும் நித்திலனுக்கு தான் போகும். நித்திலா ஐ லவ் யு டா.

எவ்வளவோ வீடியோ வைரலாகுது. நான் மாத்யூ மெக்னோஹி கூட நடிக்கணும்னு பேசுன இந்த வீடியோவும் வைரலாகட்டும், அங்கு போய் சேரட்டும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !