விநாயகர் கோவிலில் ஷாருக்கான் குடும்பத்துடன் வழிபாடு
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஷாருக்கான் இந்து கடவுள்களையும் வணங்கும் வழக்கம் உடையவர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா பந்தலுக்கு சென்றார். அங்குள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டார். அவருடன் மனைவி கவுரி கான், மகள் சுஹானா ஆகியோரும் உடன் சென்றனர்.
இந்த வழிபாட்டில் ஷாருக்கான் நீல நிற குர்தா அணிந்திருந்தார். சுஹானா பச்சை நிற பாரம்பரிய உடையிலும், கவுரி மஞ்சள் நிற மாடல் உடையுடனும் வந்திருந்தனர். இதற்கு முன்பு பிரித்விராஜ் சுகுமாரன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக், ஷில்பா ஷெட்டிட், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரும் இங்கு வந்திருந்து வழிபட்டனர்.
இதற்கு பின்னர் தனது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடிய ஷாருக்கான். “விநாயகர் சதுர்த்தி மதங்களுக்கு அப்பாற்பட்டது. எனது முன்னோர்கள் வழியிலேயே நானும் நடந்து வருகிறேன்” என்று கூறினார்.