அக்., 16ல் ‛அப்பா குட்டி' ரிலீஸ்
ADDED : 18 hours ago
மு மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‛அப்பா குட்டி'. நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க, முக்கிய வேடங்களில் பகவதி பெருமாள், ஹரிப்பிரியா இசை, அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இசை அமைத்துள்ளார்.
தந்தை மகளுக்கு இடையேயான அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகளும் நிறைவடையும் தருவாயில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வருகிற அக்., 16ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.