உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிக தியேட்டருக்காக ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்ட அசோக் செல்வன் படம்

அதிக தியேட்டருக்காக ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்ட அசோக் செல்வன் படம்


'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா கதை எழுத, ஆர்.கார்த்திகேயன் இயக்கிய உள்ள படம் 'அன்பில் அவன்'. தீவிர காதல் கொண்ட ஒரு இளைஞன் காதலுக்காக பெரிய வன்முறையாளனாக மாறுகிற கதை. ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை அசோக் செல்வனும், அவருடைய சகோதரி அபிராமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

வருகிற 25ம் தேதி வெளியாக இருந்த படம் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு அக்டோர் 2ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசோக் செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் ''அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்துத் தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

'அன்பில் அவன்' வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோகக் கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளியிடுவதற்கு எங்களை ஊக்குவித்துள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் இப்படம் பார்வையாளர்களைச் சிறந்த முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதற்குரிய பிரமாண்டத்துடனும், பெரிய அளவிலான வெளியீட்டுடனும் உங்களை வந்தடைய இந்த ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அவசியமானதே. இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக எங்களுடன் இருப்பதற்கு நன்றி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வாரம் 'மீசைய முறுக்கு 2', 'லெனின் பாண்டியன்', 'தி பாரடைஸ்', 'டோரதி' 'தி கிராண்ட் மாஸ்டர்' மற்றும் சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !