உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிறை' ஹீரோவின் 3வது படம்: கிரைம் டிராமா ஜானரில் உருவாகிறது

'சிறை' ஹீரோவின் 3வது படம்: கிரைம் டிராமா ஜானரில் உருவாகிறது


'சிறை' படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ஹீரோ எல்.கே. அக்ஷய் குமார். இவர் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளர் லலித் மகன். சிறை வெற்றிக்குபின் 'ராவடி' என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்போது 3வதாக நடிக்கும் படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் அவர் அப்பா லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜையில் இயக்குனர்கள் எச். வினோத், சிறுத்தை சிவ, துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பாளர்கள் ஆர்.கே செல்வமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் முன்னணி இயக்குனர் எச். வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' மற்றும் 'ஜனநாயகன்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இயக்குனராக தனது புதிய பயணத்தை இப்படத்தின் மூலம் தொடங்குகிறார். ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி மேற்கொள்கிறார். இசையை ஹேஷம் அப்துல் வஹாப் அமைக்கிறார்.

கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கோல்கட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. அக்ஷய் நடித்த ராவடி படம் டிசம்பர் 24ல் ரிலீஸ் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !