மீண்டும் தேசிய விருது... : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடித்துள்ள டோரதி படம் இந்த வாரம் ரிலீஸாகிறது. படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‛‛மதுரை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த ரஜினி முருகன் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பு அங்கே நடந்தது. அந்த படங்களும் வெற்றி பெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், மதுரை சாப்பாடு தவிர அங்குள்ள ஜிகர்தண்டா மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பும் மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் நடந்தது.
நான் இளையராஜாவின் இசைக்கு பெரிய ரசிகை, அவர் இசையமைத்து அவர் பாடலுக்கு நாங்கள் ஆடியது பெருமைக்குரிய விஷயம். ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். நான் இதில் ஒரு மலையாள பெண்ணாக வருகிறேன். மீண்டும் உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்த முறை ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் தேசிய விருது பெறட்டும் என பதில் சொல்கிறேன். இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது தனக்கு பெருமை. இந்தியா மட்டுமல்ல உலகளவிலும் டோரதி திரைப்படம் பேசப்படும்.
பிரபல ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரியதர்ஷன் எனக்கு எப்படி குருவோ, திருவும் எனக்கு இன்னொரு குரு. என்னுடைய ஆரம்பகால படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார், நிறைய அட்வைஸ் செய்வார். அப்பொழுது லட்டு உள்ளிட்ட நிறைய இனிப்புகள் சாப்பிட்டு குண்டாக இருப்பேன். அதை பார்த்துவிட்டு கண்டிப்பார். அவர் சொல்லிக் கொடுத்த பல விஷயங்களை நான் இன்றும் பாலோ செய்கிறேன் இதில் முத்துக்குமார் சிறப்பாக நடித்துள்ளார்'' என்றார்.