பழம்பெரும் மலையாள குணசித்ர நடிகை சாவித்ரி ஸ்ரீதரன் காலமானார்
மலையாள நாடக உலகில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் சாவித்ரி ஸ்ரீதரன். கடந்த 40 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 78 வயதான சாவித்ரி வயது மூப்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
16-வது வயதில் நாடக மேடை ஏறியவர் சாவித்ரி. பிரபல நாடக ஆசிரியர் கே.டி.முகமதுவின் 'தீபஸ்தம்பம் மகாச்சர்யம்' உள்பட பல புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தவர். நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக 'கேரள சங்கீத நாடக அகாடமி விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
1991-ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய 'கடவு' திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர். சிறந்த குணசித்ர நடிகைக்கான மாநில விருதுகளை பெற்றவர்.