உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தொடங்கிய இடத்தில் முடிந்த இயக்குநரின் கதை

பிளாஷ்பேக்: தொடங்கிய இடத்தில் முடிந்த இயக்குநரின் கதை

அருப்புக்கோட்டையை சேர்ந்த தியாகராஜனுக்கு சினிமா என்றால் கொள்ளை பிரியம். தனக்கு சரியான பின்புலம் இல்லாததால் சினிமாவை முறைப்படி கற்று சினிமாவில் சேரலாம் என்று சென்னை திரைப்படக் கல்லூரில் சேர்ந்து படித்தார். படிப்புக்கு பிறகு வாய்ப்பு தேடினார். அப்போது விஜயகாந்த் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அவரிடம் சென்று தான் எழுதிய 'மாநகர காவல்' என்ற ஸ்கிரிப்டை கொடுத்தார். அதனால் ஈர்க்கப்பட்ட விஜயகாந்த், 'சமயம்கூடி வரும்போது உன் கதையில் நிச்சயம் நடிப்பேன்' என்றார்.

அந்த நேரத்தில் ஏவிஎம் நிறுவனம் தனது 150வது படத்தை பிரமாண்டமாக கொண்டு வர திட்டமிட்டிருந்தது. அதில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. 'எங்கள் 150வது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் நாங்கள் தயாரிக்க வேண்டும். மற்றதை எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளு-ங்கள்' என்று கூறிவிட்டது. அப்போதுதான் அந்த வாய்ப்பை 'மாநகர காவல்' தியாகராஜனுக்கு கொடுத்தார் விஜயகாந்த். படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு தியாகராஜன் 'பொண்ணு பார்க்கப்போறேன்', 'வெற்றி மேல் வெற்றி' படங்களை இயக்கினார். இந்த படங்கள் வெற்றி பெறாதால் அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. போதிய வருமானம் இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்டார். அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்தார், பின்னர் நோய்வாய்பட்டு எந்த ஏவிஎம் நிறுவனத்திற்கு வெள்ளி விழா படம் கொடுத்தாரோ அதே ஏவிஎம் வாசலிலேயே இறந்து போனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !