கார்த்திகேயாவின் புதிய படம் அறிவிப்பு
'ஆர்.எக்ஸ் 100' படத்தின் மூலம் புகழ் பெற்றவர் கார்த்திகேயா. ஹிப்பி, குணா 369, 90 எம்எல், ராஜா விக்ரமையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அஜித் நடித்த 'வலிமை' படத்தில் நடித்திருந்தார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேயா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் 'கம்பேக்' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார். இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். இந்த படத்தை 2027ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் கார்த்திகேயா பாக்ஸராக நடிக்கிறார். நீண்ட காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த கார்த்திகேயா தனது தயாரிப்பில் 'கம்பேக்' கொடுப்பதால் படத்திற்கும் 'கம்பேக்' என்றே தலைப்பு வைத்துள்ளார். இந்த 'கம்பேக்' அதிரடியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில வருடங்களாக குத்துச் சண்டையை முறையாக கற்று களம் இறங்குகிறார்.