உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செஞ்சி அம்மனை பாடிய வைக்கம் விஜயலட்சுமி

செஞ்சி அம்மனை பாடிய வைக்கம் விஜயலட்சுமி

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படம் 'மண்டவெட்டி'. கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், அம்ரிதா, தேனப்பன், கஜராஜ், பிரேம் குமார், ரிதீஸ்வர் ராஜன், ஷிஜு ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் 'ராட்சசியே' பாடல் உருவாக்கியுள்ளது. உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணைந்து, மர்மமான ஒரு பெண்ணைச் சுற்றியுள்ள மாயத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் மெல்லிசையும் மர்மமும் கலந்து இந்த பாடல் உருவாகி உள்ளது.

கதையின் முக்கிய அம்சமாக இடம்பெறும் 'செஞ்சி' என்ற உக்கிரமான உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள தொன்மமும், படத்தின் சுவாரஸ்யமான கதைக்களமும் கொண்ட படமாக உருவாகி வருகிறது. ஏராளமான அம்மன் பாடல்கள் வந்திருந்தபோதும் செஞ்சி அம்மன் குறித்து முதல் திரைப்பட பாடலாக இது அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !