உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனரின் அர்த்தமற்ற பேச்சுகள்... நடிகை பகிர்ந்த விஷயம்

இயக்குனரின் அர்த்தமற்ற பேச்சுகள்... நடிகை பகிர்ந்த விஷயம்

'நாயகி' தொடரின் மூலம் புகழ்பெற்றவர் பிரதீபா. பின்னர் 'மகாநதி' தொடரிலும் நடித்தார். சமூக வலைத்தளங்ளில் பிசியாக உள்ள பிரதீபா தற்போது 'கொண்டல்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியானது இஸ்ட்ராகிராமில் ஒரு குப்பைத் தொட்டியில் சில புத்தகங்கள் கிடப்பது போன்ற படத்தை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:

ஒரு இயக்குனர் என்னைச் சந்திக்க விரும்பினார். எனது தமிழ் உச்சரிப்பை அவர் பாராட்டினார். அதை மதித்து, எனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு அவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் என்னிடம் காட்டிய பயனற்ற பேச்சுகளை புன்னகையுடன் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். என் மீது அந்த உத்திகள் பலனளிக்கவில்லை என்பதை அவர் விரைவில் புரிந்துகொண்டார். அதனால், தனது புத்தகங்களை எனக்குப் பரிசாக அளித்தார். அவற்றை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

அந்தப் புத்தகங்கள் என்னவாயின... வீட்டிற்குள் நுழைவதற்கு முன், அண்ணா நகரில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில்தான் கடைசியாக அவற்றைப் பார்த்தேன். எனக்கு ஏற்பட்ட கோபம் நியாயமானதுதான். ஆனாலும், அது எனக்குள் ஒரு சிறு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அவை குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டிய புத்தகங்களாக இருந்தபோதிலும், அவை புத்தகங்கள் தானே. மன்னிக்கவும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !