உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முத்துமணி பாடலை யாரை நினைத்து எழுதினார் இளையராஜா : வலைதளத்தில் வைரல்

முத்துமணி பாடலை யாரை நினைத்து எழுதினார் இளையராஜா : வலைதளத்தில் வைரல்

இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல, பாடகர், சிறந்த பாடலாசிரியரும் கூட. நுாற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்துக்காக அவர் எழுதிய முத்துமணி பாடல் சூப்பர் ஹிட். அந்த பாடலின் முழு வடிவம் இது.

தும்சக்கு தும்சக்கு
தும்சக்கு தும்சக்கு
ஹம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

முத்து மணிச்சாரம் கோக்கணும் கோக்கணும்
மாலையை சூடனும் தங்கத்துக்கு

முத்து மணிச்சாரம் கோக்கணும் கோக்கணும்
மாலையை சூடனும் தங்கத்துக்கு

மஞ்சளும் குங்குமமும் சந்தனம் கொழிச்சிட
பூசணும் பூசணும் பொன்மணிக்கு

பொன்மணிக்கு …..
பொன்மணிக்கு …..
பொன்மணிக்கு …..

மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாக பிறந்தவளே

நம் குலம் தான் உலக உயிரை காக்குமடி
தவிப்பவரின் துயரை எல்லாம் போக்குமடி
அந்த வானத்தில் மின்னிடும் தாரகை போல
இங்கு வந்தவளே

மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாக பிறந்தவளே

முத்து மணிச்சாரம் கோக்கணும் கோக்கணும்
மாலையை சூடனும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமமும் சந்தனம் கொழிச்சி
பூசணும் பூசணும் பொன்மணிக்கு

முத்து மணிச்சாரம் தந்தன தா ந ந
மாலையை சூடனும் தந்தன தா ந ந
மஞ்சளும் குங்குமமும் தந்தன தா ந ந

பூசணும் பூசணும் தன ந ந….

முத்து மணிச்சாரம் கோக்கணும் கோக்கணும்
மாலையை சூடனும் தங்கத்துக்கு

பொன்மணிக்கு …..
பொன்மணிக்கு …..
பொன்மணிக்கு …..
பொன்மணிக்கு …..

வண்ணகிளியே உன்னை காணாத நாள் இங்கு

நாள் இல்லையே ….நாள் இல்லையே ….
நாள் இல்லையே ….நாள் இல்லையே ….

பொன் மயிலே
நீ இல்லாமல் பொழுதிங்கு
நகரலையே ….
நகரலையே ….
நகரலையே ….

அக்கம் பக்கம் போனபோது உன்ன பார்த்தவன் நான்
பக்கம் பக்கம் இருந்தபோது உன்ன பார்க்கலையே

அருகில் இருந்த போது நானும் வெகு தூரத்திலே
தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலே

முத்துமணி பவளமணி மாலைகளை சூடி
மின்னும் பொன்னும் வைர கிரீடம்
சிரசில் தக தகவென ஜொலிக்கும்
மாதங்கி மரகத மணி
மீனாட்சி நீதாடி…..மீனாட்சி நீதாடி

ஒரு வழி பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கனுமா….

ஒரு வழி பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கனுமா….

வாடி மீனாட்சி வழி துணையாய் காமாட்சி…

தும்சக்கு தும்சக்கு

இந்த பாடலை அவர் ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடல் படத்தின் கிளைமாக்சில் முக்கியமான இடத்தில் வருகிறது. பாடலின் வரிகள் அந்த காட்சிக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது. இந்த பாடல் வைரல் ஆகியுள்ளது. படத்துக்காக, கதைக்காக இந்த பாடலை அவர் எழுதியிருக்கிறார் என சொன்னாலும். மறைந்த தனது மகள் பவதாரிணியை நினைத்து இந்த பாடலை எழுதியிருக்கிறார். பாடலை இன்னொரு முறை கேளுங்கள், அந்த வரிகளை உன்னிப்பாக படியுங்க. அது உண்மை என தெரியும் என இணையதளத்தில் கருத்துகள் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !