உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவின் அதிக பணக்கார நடிகர்கள் யார் ?, தமிழ் நடிகர்களுக்கு இடமில்லை…

இந்தியாவின் அதிக பணக்கார நடிகர்கள் யார் ?, தமிழ் நடிகர்களுக்கு இடமில்லை…


இந்தியத் திரையுலகத்தில் யார் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற பேச்சுதான் அதிகமாகப் பேசப்படும். 200 கோடி சம்பளம், 300 கோடி சம்பளம், லாபத்தில் பங்கு என சில ஹீரோக்களின் ஒரு படத்திற்கான மொத்த வருவாய் 500 கோடியைக் கூட நெருங்குவதாகச் சொல்கிறார்கள்.

சில ஹீரோக்கள் சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயுடன் மட்டும் அமைதியாக இருந்துவிடுவார்கள். சில ஹீரோக்கள் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு படங்களைத் தயாரித்து லாபமும் பெறுவார்கள், போட்ட முதலீட்டையும் இழப்பார்கள். ஆனால், சிலர் மட்டுமே சினிமாவைத் தவிர்த்த வேறு தொழில்களில் முதலீடு செய்து தங்களது வருவாயை பெருக்கிக் கொண்டே போவார்கள். இந்திய அளவில் அதிக பணக்கார நடிகர் யார் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

எம்3எம் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2026 வெளியிட்ட தகவல்படி இந்தியாவின் அதிக பணக்கார நடிகர்கள் பட்டியல்….அவர்களது சொத்து விவரம், தொழில் முதலீடுகள், இதர வருவாய் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

1. ஷாருக்கான் - 10,000 கோடி

2. நாகார்ஜூனா - 5000 கோடி

3. அமிதாப்பச்சன் - 4000 கோடி

4. சல்மான் கான் - 3000 கோடி

5. ஹிருத்திக் ரோஷன் - 2500 கோடி

6. அக்ஷய் குமார் - 2300 கோடி

7. அமீர்கான் - 1800 கோடி

8. சிரஞ்சீவி - 1700 கோடி

9. வெங்கடேஷ் - 1650 கோடி

10. ராம் சரண் - 1400 கோடி

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களாக பேசப்படும் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது. இத்தனை படங்களில் நடித்தும் கூட அவர்களது சொத்து மதிப்பு 1000 கோடியைத் தாண்டவில்லையா என்ற கேள்வியும் இந்தப் பட்டியலைப் பார்த்ததும் இயல்பாக எழுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

abpr
2026-09-27 19:03:16

பாலிவுட் நடிகர்கள் அதிகமாக சம்பாதிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்கள் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுவதுதான்.விளம்பரப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், விருது விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள், பெரிய நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் என பலவற்றில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாகவும், சிலவற்றில் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். பெரிய தொழிலதிபர்களின் தனிப்பட்ட விழாக்களில்கூட அவர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது.ஆனால் தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் சினிமாவில் நடிப்பதன் மூலமே பிரதானமாக வருமானம் ஈட்டுகிறார்கள். விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் போன்ற கூடுதல் வாய்ப்புகளில் பாலிவுட் நடிகர்களைப் போல அதிகமாக ஈடுபடுவதில்லை.இதுதான் இரு திரையுலகங்களுக்கும் இடையிலான வருமான வித்தியாசத்திற்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஒருவருடைய வருமானத்தை வெறும் திரைப்பட சம்பளத்தை வைத்து மட்டும் ஒப்பிட முடியாது அவர்கள் திரைப்படத்திற்கு வெளியே எத்தனை வழிகளில் வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.ஷாருக்கான் கூட, பணம் கொடுத்தால் உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்குக்கூட வருவேன் என்று பல சந்தர்ப்பங்களில் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார். இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளும் பாலிவுட் நட்சத்திரங்களின் கூடுதல் வருமானத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன.சுருக்கமாகச் சொன்னால், இங்கே பல நடிகர்கள் நடிப்பை மட்டுமே பிரதான வருமானமாக வைத்திருக்கிறார்கள் அங்கே பல நடிகர்கள் நடிப்புடன் சேர்த்து விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என பல தளங்களில் தங்களுடைய பிரபலத்தை வருமானமாக மாற்றிக் கொள்கிறார்கள். அதனால்தான் அவர்களுடைய மொத்த வருமானத்தில் பெரிய வித்தியாசம் இருப்பது இயல்பானது.