உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛லவ் அண்ட் வார்' : விக்கி கவுசலின் இரு மாறுபட்ட தோற்றங்கள் வெளியீடு

‛லவ் அண்ட் வார்' : விக்கி கவுசலின் இரு மாறுபட்ட தோற்றங்கள் வெளியீடு

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் ‛லவ் அண்ட் வார்'. ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுசல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். காதலும், ஆக் ஷனும் கலந்த படமாக உருவாகி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஏற்கனவே ரன்பீர், ஆலியா பட் ஆகியோரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

இப்போது விக்கி கவுசலின் இரு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு போஸ்டரில் சிகரெட் மற்றும் லைட்டருடன் தோன்றும் விக்கி கம்பீரமாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், நீச்சல் குளத்தில் மலர் கொத்துடன் இருக்கும் அவர், முதல் போஸ்டரில் பார்த்த தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக காட்சியளிக்கிறார். இந்த இரு மாறுபட்ட போஸ்டர்களும் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. முதன்முறையாக சஞ்சய் லீலா பன்சாலியின் படைப்பில் ஒரு கதாநாயகனாக விக்கி கவுசல் களமிறங்குவது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் 2027, ஜனவரி 21 அன்று உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !