உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் வழியில் கவுதம் கார்த்திக் : பைக் ரேசில் பங்கேற்கிறார்

அஜித் வழியில் கவுதம் கார்த்திக் : பைக் ரேசில் பங்கேற்கிறார்

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரன், நடிகர் கார்த்திக்கின் மகன், கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி, பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது பிளடி பாலிடிக்ஸ், ரூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் பாணியில் பைக் ரேசில் ஆர்வம் காட்டி வருகிறார் கவுதம் கார்த்திக். இதற்காக முறையான பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

பைக் ஓட்டுவதை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல், அதில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு, மோட்டார் ஸ்போர்ட்ஸில் தன்னை படிப்படியாக தயார்படுத்தி வருகிறார் கவுதம். மோட்டார் சைக்கிள் பந்தயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், ஒவ்வொரு பயணத்தின் மூலமும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார்.

கவுதம் மற்றும் அவரது நண்பர்களின் பைக் பயணம், அதற்கான தயாரிப்புகள், பயிற்சிகள் என பல்வேறு தருணங்களை குறும்படமாகவும் தயாரித்துள்ளார். தனது ஆர்வத்தை வெறுமனே பொழுதுபோக்காக வைத்துக் கொள்ளாமல், அதை முறையாக கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் பயணித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !