உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டோரதி, மீசைய முறுக்கு 2 படங்களின் மூன்று நாள் வசூல் விவரம்

டோரதி, மீசைய முறுக்கு 2 படங்களின் மூன்று நாள் வசூல் விவரம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷி காந்த், சனந்த் ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் 25ம் தேதி திரைக்கு வந்த படம் ‛டோரதி'. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் 1990-களில் தமிழ்நாட்டு கிராமத்தில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு சினிமா படைப்பாளிகள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தபோதும், ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படம் திரைக்கு வந்து கடந்த மூன்று நாட்களில் 4.25 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், இதே செப்டம்பர் 25ம் தேதி ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து வெளியாகியுள்ள மீசைய முறுக்கு 2 படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் இதுவரை 17 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர், சைத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !