உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிங் 100 : தபுவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு டீசர்

கிங் 100 : தபுவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு டீசர்

நாகார்ஜுனா தற்போது தனது 100வது மைல்கல் திரைப்படமான கிங் 100 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற வீடியோ கடந்த மாதம் நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. தற்போது, படக்குழு மற்றொரு சிறப்பு வீடியோவை வெளியிடத் தயாராகி வருகிறது.

சமீபத்திய தகவல்களின்படி, நடிகை தபுவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு டீசரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் முதன்மை கதாநாயகிகளில் ஒருவராக தபு நடிக்கிறார். சுஷ்மிதா பட் உட்பட மொத்தம் மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். நாகார்ஜுனாவும், தபுவும் இதற்கு முன்பு 1990-களில் காதல் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளியான, நின்னே பெல்லாடுதா என்ற தெலுங்கு படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. நீண்ட இடைவேளைக்குப்பிறகு, அவர்கள் இருவரும் கிங் 100 படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கும் கிங் 100 திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் மனம் என்டர்பிரைசஸ் இணைந்து தயாரிக்கின்றன. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் ஸ்லம்டாக் படத்திலும் தபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பூரி ஜெகன்னாத், தபுவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு டீசரை வெளியிட்டார். அப்படத்தில் தபு, கௌரி ஹெக்டே என்ற வருமான வரித்துறை ஆணையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !