ரூ.155 கோடி வசூலித்த 'தி பாரடைஸ்', ஆச்சரியத்தில் தெலுங்கு சினிமா
ஒரு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் அந்தப் படம் அதிக வசூலைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் படம்தான் நானியின் 'தி பாரடைஸ்'. கடந்த வாரம் செப்டம்பர் 24ம் தேதியன்று இப்படம் வெளியானது.
நேற்றுடன் முடிந்த முதல் வார இறுதியுடன் இப்படம் உலக அளவில் 155 கோடியை வசூலித்துள்ளது. அது மட்டுமல்ல, அமெரிக்காவில் 2 மில்லியன் வசூலையும் கடந்துள்ளது.
இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இன்று கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் இந்தப் படத்தின் அடுத்த கட்ட வசூல் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.
100 கோடி நிகர வசூல் கிடைத்தால் இந்தப் படம் லாபத்தைப் பெற்றுவிடும் என்கிறார்கள். அதற்கு இன்னும் 20 கோடி வரை வசூல் தேவைப்படுகிறது. அது இந்த வாரத்திற்கும் நடந்துவிடும் என்பதால் வணிக ரீதியாக படம் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.