உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 1 - ஓடிடி தளத்தில் 'சர்தார் 2' ரிலீஸ்

அக்டோபர் 1 - ஓடிடி தளத்தில் 'சர்தார் 2' ரிலீஸ்

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'சர்தார் 2'. சுமார் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் தியேட்டர் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சுமார் 20 கோடி மட்டுமே இந்தப் படம் வசூலித்ததாக சொல்லப்பட்டது.

அப்படத்துடன் வெளியான சூரி நடித்த 'மண்டாடி' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. கார்த்தி நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த இரண்டு படங்களான 'வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன. 'வா வாத்தியார்' படம் ஓடிடியில் வெளியான போது கூட வரவேற்பைப் பெறவில்லை.

'சர்தார் 2' படம் இந்த வாரம் அக்டோபர் 1ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஓடிடி தளத்தில் வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-09-28 20:14:40

ஓவர் built up உலகத்துக்கு ஒத்துக்காது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். OTT ல சர்தார் சர்ர்ர்ர் டார்ர்ர்ர்ர் . OTT க்கு கூட ஒரு நியாயம் தர்மம் இருக்கு. to all efficient and hard working better luck next time . சினிமா ரசிகர்கள் க்கு நல்ல படம் யார் நடிச்சி இருந்தாலும் ஓடும். தயவு செய்து ரசிகர்களை low ஆ நினைத்து படம் எடுக்காதீர்கள்