தினேஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த காதலி !!
'அட்டகத்தி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அதன்பின்பு 'அட்டகத்தி தினேஷ்' என்றே அழைக்கப்படுகிறார். அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், “விசாரணை, ஒரு நாள் ஒரு கூத்து, லப்பர் பந்து” ஆகிய படங்கள் அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தன.
தற்போது 'வேட்டுவம், பந்தா கேங்ஸ்' ஆகிய படங்களில் நடித்து வரும் தினேஷ் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரும் விஜே எழிலரசியும் காதலிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு எழிலரசி அவருடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் அன்புக்குரியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் உனக்குச் சிறந்தவை மட்டுமே அமையட்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உன்னையேதான் தேர்ந்தெடுப்பேன்.
ஒரு தகவல் - தோழிகளே, தயவுசெய்து பாதுகாப்பான தூரத்தில் இருந்தே ரசியுங்கள், நன்றி. மேலும், கண்டிப்பாக 'இல்லை' ,” என்றும் பதிவிட்டுள்ளார்.
தினேஷூம் எழிலரசியும் கடந்து சில வருடங்களாகவே காதலித்து வருவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். இருவரது திருமணம் எப்போது என்பது அடுத்த கேள்வியாக எழுகிறது. சீக்கிரமே பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.