உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர் 2' பாடல்கள் நாளை மறுநாள் ரிலீஸ்: என்ன பேசப்போகிறார் ரஜினிகாந்த்?

'ஜெயிலர் 2' பாடல்கள் நாளை மறுநாள் ரிலீஸ்: என்ன பேசப்போகிறார் ரஜினிகாந்த்?


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ல் ரிலீஸ் ஆகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜெயிலர் 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா எங்கே நடக்கப்போகிறது. எப்போது நடக்கப்போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெயிலர்2 பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஏனோ அது நடக்கவில்லை. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கலாம் என்று கூறப்பட்டது. அதுவும் செட்டாகவில்லை.

இந்நிலையில் ஜெயிலர் 2 அனைத்து பாடல்களும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. எங்கே நடக்கிறது என பலருக்கும் குழப்பமாக உள்ளது. இது குறித்து விசாரித்தால் சென்னை பெருங்குடியில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்டூடியோவில் இந்த விழா நடக்கிறது. அதிக ரசிகர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார், என்ன குட்டி கதை சொல்லப்போகிறார், யாருக்காவது மறைமுகமாக, நேரடியாக கருத்து சொல்லப்போகிறாரா? செப்டம்பர் 30ம் தேதி என்ன நடக்கப்போகிறது என்பது பலரின் ஆவலாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !