உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும்

பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும்


கேரளாவில் இருந்து கோவில் திருவிழாவில் நடனமாட வந்தவர் கே.ஆர்.விஜயா. பின்னர் பழனியில் செட்டிலான அவர் அங்கு நாடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இந்த நாடகத்தின் மூலம் கே.ஆர்.விஜயாவை அறிந்த ஒருவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சொல்ல கே.ஆர்.விஜயாவை சென்னைக்கு அழைத்து வந்து 'கற்பகம்' படத்தில் நடிக்க வைத்தார்.

மளமளவென 99 படங்களில் நடித்தவர் தனது 100வது படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான் இயக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி 100வது படமான 'நத்தையில் முத்து' படத்தையும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார்.

100வது நாள் விழாவில் பேசிய எம்ஜிஆர், கே.ஆர்.விஜயாவின் 200வது படத்தையும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்க வேண்டும் என்றார். அவரது வாக்கு பலித்தது. 200வது படமான 'பண்ணையார்' படத்தையும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான் இயக்கினார். 250 மற்றும் 300வது படத்தையும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே இயக்கினார். இந்த அபூர்வ இணைப்பு வேறு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !