உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மண்டாடி வசூல் ரூ.140 கோடி தாண்டியது : காமெடியன் டூ ஹீரோவின் டாப் சூரிதான்

மண்டாடி வசூல் ரூ.140 கோடி தாண்டியது : காமெடியன் டூ ஹீரோவின் டாப் சூரிதான்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்த மண்டாடி படம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திரா, தெலுங்கானாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு நாடுகளிலும் வெளியாகி வசூலை அள்ளியது. இன்று மண்டாடி படம் 140 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் 5 படங்கள் வந்தாலும், மண்டாடி வசூல் பெரியளவில் குறையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 15ல் ரஜினி நடித்த ஜெயிலர் 2 வருகிறது. அதுவரை மண்டாடி ஓட வாய்ப்பு. படத்தின் ஒட்டு மொத்த வசூல் 160 கோடியை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சூரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமெடியனாக இருந்து ஹீரோ ஆன வடிவேலு, சந்தானம், சதீஷ், யோகிபாபு வரிசையில் சூரியின் படம்தான் இந்த அளவுக்கு அதிக வசூலைக் கொடுத்துள்ளது. அதனால், இனி அவர் காமெடியனாக இப்போதைக்கு மாற வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. அடுத்து, ‛அயலான்' ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கப் போகிறார். அடுத்து சூரியை வைத்து படம் பண்ண பலர் தயாராக இருக்கிறார்கள். சூரி கதைநாயனாக நடித்த விடுதலை, விடுதலை 2, கருடன், மாமன் போன்ற படங்கள் 50 முதல் 60 கோடி வரை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-09-30 12:58:23

அடித்து விடுகிறார்.. காசா பணமா