உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஷ்பு பிறந்தநாள் பரிசு : மீசைய முறுக்கு 2 டீம் நெகிழ்ச்சி

குஷ்பு பிறந்தநாள் பரிசு : மீசைய முறுக்கு 2 டீம் நெகிழ்ச்சி

நடிகை குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு 2 படம் 50 கோடி வசூலை தாண்டியுள்ளது. அதை முன்னிட்டு படக்குழுவினர் நேற்று சக்சஸ் மீட் நடத்தினர். கேக் வெட்டி கொண்டாடினர். நேற்று நடிகை குஷ்புவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கும் படக்குழு சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது.

விழாவில் பேசிய பலரும் இதுதான் தயாரிப்பாளர் குஷ்புக்கு உண்மையான பிறந்தநாள் பரிசு என்றார்கள். தயாரிப்பாளரான இயக்குனர் சுந்தர்.சியும் ஹிப்ஹாப் ஆதியை வாழ்த்தினார். ‛‛இந்த கதையை சொன்னபோது இது மீசைய முறுக்கு 2 வாக எடுக்கலாம் என்றேன். எங்கே சென்றாலும் அவரை ஆதி அண்ணா என கொண்டாடுகிறார்கள்'' என்றார் சுந்தர் சி.

ஹிப்ஹாப் ஆதி பேசுகையில், இந்த பட வெற்றிக்கு நான் மட்டும் காரணமல்ல, என் குழுவில் பலர் இருக்கிறார்கள் என அவர்களை அறிமுகப்படுத்தினார். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான குஷ்பு மகள் அனந்திகாவை புகழ்ந்தார். மேலும் தனது மனைவிக்கும் நன்றி சொன்னார். இந்த படத்தின் கதை கானா பாடகர்கள் பற்றியது என்பதால் கானா பாடகர்களை ஊக்குவிக்கும் வகையில் கானா கேங் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் பல கானா பாடகர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் மீசைய முறுக்கு 2 எப்போது என கேட்டார். அவரால் தான் இந்த படத்தின் வேலைகளை தொடங்கினேன். அவருக்கும் நன்றி. நான் எந்த ஊருக்கு சென்றாலும் என் மீது ரசிகர்கள் அன்பை பொழிகிறார்கள். அதனால், சில மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் படம் வெற்றி அடைந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !