உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த பக்கம் இளையராஜா, அந்த பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் : கானாவை தேர்ந்தெடுத்தது குறித்து இசையமைப்பாளர் தேவா

இந்த பக்கம் இளையராஜா, அந்த பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் : கானாவை தேர்ந்தெடுத்தது குறித்து இசையமைப்பாளர் தேவா

சென்னையில் நடந்த மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் தேவா பேசியது...

மக்களை நன்றாக புரிந்து கொண்டு உள்ளார் ஆதி. அது அவர் செய்த மிக பெரிய பாக்கியம். அவர் எந்த பாடல் பாடினாலும் கோடிக்கணக்கில் போகிறது. எங்கள் வீட்டில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், என் பேரன் ஹிப்ஹாப் ஆதி ரசிகர். அவர் போட்டோவைதான் போனில் வைத்து இருக்கிறார். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தோம்.

நான் ஏன் சினிமாவில் கானாவை கொண்டு வந்தேன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. நான் சினிமாவுக்கு வந்தபோது இளையராஜா கொடிகட்டி பறந்தார். இப்போதும் அப்படிதான். அடுத்து ஏஆர் ரஹ்மான் வந்தார். அப்போதும் எனது பாடலை பற்றி பேசும் போது ஒன்று ராஜா சார் பாடல் போல் உள்ளது எனவும் இல்லை என்றால் ரஹ்மான் சார் போல் உள்ளது என கூறுவார்கள். பத்திரிக்கையில் என்னை கழுவி ஊற்றுவார்கள். அதனால் தனி பாணியை தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

கானா பாடலை திரைப்படத்தில் கொண்டு வரலாம் என நினைத்து கொண்டு வந்தேன். ஆனால் அது சாதாராண விஷயம் இல்லை. அந்த காலத்தில் அந்த பாடல்களை பிளாட்பார்ம் சாங் என்பார்கள். அது சென்னையில் நாட்டுப்புற பாடல். நான்தான் அதை கானா என மாற்றினேன். கானா என்றால் ஹிந்தியில் பாடல் என அர்த்தம். வட சென்னை மக்களும் கானா பாடல் கொண்டு வர முக்கியமானவர்களாக இருந்தார்கள். ராஜா சாருக்கும், ரஹ்மான் சாருக்கும் கானா பாடல் தெரியாது அதனால் நான் அதை கொண்டு வந்தேன்.

மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை பார்த்த அனைவரும் திரையரங்குகளில் அழுதார்கள். கானா கலைஞர்களுக்கு பாட்டுதான் எல்லாம். ஆரம்பத்தில் உழைக்கும் மக்கள் வலி தெரியாமல் இருக்க இந்த வகை பாடல்களை பாடினார்கள். பின்னர், அது தொழில் ஆனது. கானா பாடகர்கள் வித்தியாசமான உடல் அமைப்பில் இருப்பார்கள். ஆனால், குழந்தை மனசு. எந்த டாபிக் கொடுத்தாலும் பாடுவார்கள். நான் மந்தவெளி, மயிலாப்பூரில் வசித்தேன். எனக்கு அந்தகாலத்தில் பல கானா பாடகர்கள் நண்பர்கள். அவர்கள் பாடலை சினிமாவில் கொண்டு வந்தேன். ஆனால் அடிக்கடி சொல்லும் ஆண்டனி, அல்போன்ஸ் ஆகியோர் கூட கானா பாடகர்தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !