உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஐ நிறுவனத்திடம் 7 கோடி கேட்கும் ஊர்வசி ரத்தேலா

ஏஐ நிறுவனத்திடம் 7 கோடி கேட்கும் ஊர்வசி ரத்தேலா


முன்னணி பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா. தென்னிந்திய சினிமாவில் ஒரு பாடலுக்கு ஆடுவார். சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அவரது படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு அவர் படு கவர்ச்சியாக வருவதே இதற்கு காரணம்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தனது படங்கள், வீடியோக்களை ஏஜ தொழில்நுட்பத்திற்கு மாற்ற வசதி செய்து கொடுத்த அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வரும் ஒரு ஏஐ நிறுவனத்தின் மீது 7 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளார்.

இதுகுறித்து அவரின் சட்டப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ரூ.7,000 கோடி இழப்பீடு கோருவது குறித்துத் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றி ஊர்வசியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துத் கொள்ளக் கூடாது.

ஒரு தனிநபரின் அடையாளம் மற்றும் புகைப்படங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெறாமல் பிரபலங்களின் படங்கள், வீடியோக்களை பயன்படுத்துவது சட்டப்படி தவறானது. விரையில் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுக்க உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !