உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மக்கள் காவலன் டிச., 4ல் ரிலீஸ் : ஆக் ஷன் ஹீரோவாக மணிகண்டன்

மக்கள் காவலன் டிச., 4ல் ரிலீஸ் : ஆக் ஷன் ஹீரோவாக மணிகண்டன்

சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் படம் மக்கள் காவலன். இந்த படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று, அவரின் பிறந்தநாளான நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர் உட்பட பலர் நடிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

தலைப்புக்கு ஏற்ப அவர் போலீசாக நடிக்கிறார். லட்சியம் - மன உறுதி - தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல் ஆகியவை 'மக்கள் காவலன்' படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என படக்குழு கூறியுள்ளது. 'குட் நைட்', 'லவ்வர்', 'குடும்பஸ்தன்' ஆகிய படங்களின் கமர்ஷியல் வெற்றிக்குபின் இதில் மணிகண்டன் ஆக் ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !