'அய்யனார் துணை' மதுமிதா திருமணம்: காதலரை மணக்கிறார்
ADDED : 12 hours ago
கன்னட சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் மதுமிதா. ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பிரியாத வரம் வேண்டும்' என்கிற தொடர் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு எதிர்நீச்சல் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'அய்யனார் துணை' என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அரவிந்த் நடிக்கிறார்.
இந்த நிலையில் மதுமிதா தான் பாலாஜி என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இவர்களுக்கு இன்று (செப்டம்பர் 30) திருமணம் நடைபெறுகிறது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.